மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும்.
கடினமான சூழல் விலகிச்செல்லும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். வியாபாரத்தில் பிரச்சனைகள் விலகிச் செல்லும். பணவரவு சீராக இருக்கும். அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பிரச்சனை இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் ஈட்டுவீர்கள். காரியங்களில் எளிதில் வெற்றி பெறக்கூடும். பெண்கள் எந்தவொரு செயலையும் அக்கறையுடன் செய்து முடிப்பார்கள்.
பெண்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். எதிலும் இன்று நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் சரியாகிவிடும். ஆரோக்கியத்திலிருந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். தேவையில்லாத பயத்தை விட்டுவிடுங்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கும் முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் உற்சாகமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முன்னேற்றமான தருணங்கள் அமையும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். பிரச்சனைகள் சரியாகும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு பணியையும் செய்து வாருங்கள், கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.