Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்கள்…. சக்கரத்தில் உடல் நசுங்கி பலியான சோகம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் மித்திலேஸ் மற்றும் புபேந்திரா என்ற வாலிபர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நம்பியாம்பாளையம் பகுதியில் தங்கி வேட்டுவபாளையத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் 2 பேரும் நம்பியாம்பாளையத்திலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சுண்டக்காம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது.

இதில் இருவரும் தடுமாறிக் கீழே விழுந்து லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அவினாசி காவல்துறையினர் 2 பேரையும் மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |