இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்து ஜனநாயக முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் இந்து ஜனநாயக முன்னணி சார்பில் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் கர்நாடகாவில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் கோதாவரி தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து ஒன்றிய நிர்வாகிகள் திருப்புல்லாணி அரியமுத்து, போகலூர் கருப்பையா, நயினார்கோவில் தியாகராஜன், மண்டபம் சுந்தரமூர்த்தி, பாம்பன் காசிநாதன், ராமநாதபுரம் பாலகிருஷ்ணன், செல்வராஜ், வழுதூர் சங்கர் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.