நதியாவிடம் நீ இனிமேல் ஜோக்கருன்னு சொன்னா உன்னை கிஸ் பண்ணி விடுவேன் என பிரபல நடிகர் பயமுறுத்தி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நதியா. மலையாளத்தில் வெளிவந்த நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை இயக்குனர் பாசில் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துதான் பூவே பூச்சூடவா என்னும் திரைப்படம் வெளியாகியது. இவர் நவநாகரீக நடிப்பு கச்சிதமான உடை அணிதல் போன்ற அனைத்திலும் சீராக இருந்ததால் ஆண்கள் மனதையும் பெண்களின் மனதையும் இவர் கவர்ந்தார். இவரின் பெயரால் பெண்களின் உடைகள், அணிகலன்கள் விற்பனையானது. மேலும் அது மிகவும் பிரபலமானது. இப்படிப்பட்ட நடிகை கமலுடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு வேண்டுமானாலும் வரும். கமலுடன் நடிக்கும் வாய்ப்பு நதியாவுக்கு வந்தது. ஆனால் அவர் நடிக்க விரும்பவில்லை. நதியாவும் கமலும் எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள். இவர் கண்ணியமான ஹீரோயின். அவர் காதல் இளவரசர். கமல் படம் என்றாலே முத்தக் காட்சிகள் இல்லாமல் இருக்காது. அதனாலேயே நதியா அவருடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். ஆனால் பிறகு ஒரு நாள் அவருடன் நடிக்க முடியவில்லை என வருத்தப்பட்டார். இதைப்போலவே நதியாவை நிஜமாகவே ஒரு நடிகர் முத்தத்தின் பெயரால் பயமுருத்தி உள்ளார். அவர் மலையாள நடிகர் முகேஷ். நதியா முகேஷ் உடன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். முகேஷின் நகைச்சுவை திறனுக்கு விரைவில் நதியா அடிமையானார். அனைவரும் இருக்கும்போது முகேஷ் ஒரு நல்ல ஜோக்கர் என்று கூறியுள்ளார். அதற்கு அனைவரும் சிரித்தனர். இதனால் நதியா முகேஷை பார்க்கும் பொழுது ஜோக்கர் என கூறுவார். அதனால் முகேஷ், ஜோக்கர்ன்னு கூப்பிட்டா உன்னை கிஸ் பண்ணி விடுவேன் என்று கூறியுள்ளார். இதற்கு நதியா உண்மையிலேயே கிஸ் பண்ணி விடுவாரோ என்ற பயத்தில் அன்றிலிருந்து ஜோக்கர் எனக் கூப்பிடுவதை விட்டுவிட்டாராம். சினிமா துறையில் முத்தம் என்பது சகஜமான ஒன்று. ஆனால் அந்த முத்தம் ஒரு நடிகையின் வாழ்வில் எப்படியெல்லாம் நிகழ்ந்துள்ளது என விவரித்துள்ளது.