அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆசனூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து நிலையம் அருகாமையில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனை பிடித்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது முருகனிடம் 69 லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முத்து என்பவர் மூலமாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் முருகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.