Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“காதலியின் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொள்வேன்” முதல்வருக்கு மனு அனுப்பிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காதலியின் பிறந்த நாளன்று தற்கொலை செய்வதாக கவர்னர், முதல்வருக்கு வாலிபர் மனு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகர் லொக்கன ஹள்ளி பகுதியில் உத்தமராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு உத்தமராஜா திருப்பூரில் தங்கி வேலை செய்தபோது அங்குள்ள இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உத்தமராஜாவும் அந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின் உத்தமராஜா சொந்த ஊருக்கு திரும்பிய போது பேஸ்புக், செல்போன் மூலம் அந்த பெண்ணுடன் பேசி வந்துள்ளார். இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் உத்தமராஜா தனது காதலியுடன் பேசமுடியவில்லை.

இந்நிலையில் உத்தமராஜா காதலியை தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லையென்றால் நாளை மறுநாள் 2-ஆம் தேதி காதலியின் 28-வது பிறந்த நாளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என தமிழக முதல்வர், கவர்னர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் மனு அனுப்பியுள்ளார். இதுகுறித்து திருப்பூர் காவல்துறையினர் கூறுவதாவது, உத்தமராஜா அனைவருக்கும் தற்கொலை மிரட்டல் கடிதம் விளையாட்டுக்கு அனுப்பி உள்ளாரா? அல்லது உண்மையிலேயே சொல்கிறாரா? என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும் அவர் தற்கொலை செய்வதாக கூறிய நாளன்று நாம் கவனமாக இருப்போம் என்றனர்.

Categories

Tech |