மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்த நிலுவை தொகை மொத்தமாக வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகின. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தற்போது அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அரசு அதிகாரிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு அகவிலைப்படி உயர்வு தற்போது வழங்கப்பட மாட்டாது எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அரசு ஊழியர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசு பல்வேறு நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால் அகவிலைப்படி வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள 48 லட்சம் அரசு ஊழியர்களும் 60 லட்சம் பக்தர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.