தமிழக முதல்வர் ஸ்டாலின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கனிமொழி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது, பொறுப்பேற்றது முதலே ஸ்டாலின் புரிந்துவரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எதையும் சொல்ல தேவையில்லை. சில கட்சியினர் போல் நாங்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டு அலைவதில்லை. முதல்வர் எல்லாவற்றையும் செயலில் காட்டுகிறார். செங்கோல் ஆட்சி என மன்னர்கள் காலத்தில் கூறப்படுவது போல் தற்போது செங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களின் மனதை புரிந்து கொண்டு அதன் வழி நடப்பவர் ஸ்டாலின். இதனால் தமிழகம் செழித்தோங்கி வருகிறது. முதல்வர் வெளியிட்டுள்ள உங்களில் ஒருவன் புத்தகம் தலைவர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி புத்தகம் போல் இருக்கும் என அவர் கூறினார். இதையெல்லாம் பார்ப்பதற்கு கலைஞர் அவர்கள் எங்களுடன் இல்லை என கூறியபோது, அவருடைய குரல் கம்மியது.
அதோடு கண்களில் கண்ணீரும் வெள்ளம் போல் பெருகியது. என்னுடைய தந்தையின் அன்பை என் உடன்பிறப்புகள் வாயிலாக பார்க்கிறேன் என அவர் கூறினார். நீட் தேர்வுக்கு எதிராக உதயநிதி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். உதயநிதியின் இந்த குரல் நெஞ்சுக்கு நீதி யாக ஒலிக்கிறது என அவர் கூறினார். இந்த மேடை வெறும் டிரைலர் தான் எனவும் மெயின் பிக்சர் இனி தான் இருக்கிறது எனவும் கூறினார்.