Categories
அரசியல்

“அதிகார திமிரில் கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் திமுக….!!” ஓபிஎஸ் காட்டம்…!!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புழல் சிறைக்கு சென்று நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் என்று கூட பாராமல் நள்ளிரவில் ஜெயக்குமார் அவர்களை கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விஷயமாகும்.

அதோடு அவர் ஜாமினில் வெளி வராத வகையில் திமுக அரசு அடுக்கடுக்காக பொய் வழக்குகளை அவர் மீது சுமத்தி சிறையில் அடைத்துள்ளது. கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகரை கைது செய்யாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்தது எந்த வகையில் நியாயம். அதிகாரம் கையில் இருக்கும் காரணத்தால் திமுக அரசு அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருகிறது. தன்னை எதிர்க்கும் கட்சியை உறு தெரியாமல் அழித்து விட வேண்டுமென்று சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் முக ஸ்டாலின். எதிர்க்கட்சிகளை அளிக்க ஒரு முதல்வர் கங்கணம் கட்டிக் கொண்டு அலைவது நாட்டிற்கு நல்லதல்ல. தேனி மாவட்டத்தின் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் வெற்றி பெற்றவர்களை திமுகவில் இணையுமாறு போலீசார் மிரட்டி வருகின்றனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |