நடிகை காஜல் அகர்வால் நார்மல் டெலிவரிக்காக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களுடன் படம் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 2020 ஆம் வருடம் தன் காதலரான கிவுதம் கிட்சுலுவை கல்யாணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து புத்தாண்டன்று தான் கருவுற்று இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டார். தனது குழந்தையின் பம்ப் புகைப்படங்களை அவர் வெளியிட்டார்.
https://www.instagram.com/reel/Cag262RBpRm/?utm_source=ig_web_button_share_sheet
இவருக்கு அண்மையில் வளைகாப்பு நடந்து முடிந்தது. வளைகாப்பின்போது அவர் சிவப்பு நிற சேலை அணிந்து அழகாக இருந்தார். புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் நார்மல் டெலிவரிக்காக ஜிம்மில் கர்ப்பிணிக்கான ஒர்க் அவுட் செய்து வருகின்றார். வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கர்ப்பிணிக்கான தோற்றத்துடன் காஜல் உள்ளார்.