4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம் பகுதியில் ஜோதிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் 4 வயது சிறுமி பள்ளிக்கு செல்வதற்காக ஜோதிலிங்கம் கடை முன்பாக வேனுக்காக காத்திருந்திருக்கிறார். அப்போது ஜோதிலிங்கம் சிறுமியை கடைக்கு உள்ளே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் சிறுமி வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார். பின்னர் சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சிறுமியை மீட்டுள்ளனர். இது பற்றி சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜோதிலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.