ஏப்ரல் மாதம் முதல் பிஎஃப் கணக்கில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பிஎஃப் பங்களிப்பு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனையடுத்து PF பங்களிப்பு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கான வரி விதிப்பு குறித்து வருமான வரித்துறையும் கடந்த ஆண்டு விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதன்படி பிஎஃப் கணக்கு 2 கணக்குகளாக பிரிக்கப்படும்.
2021-2022-ஆம் ஆண்டிற்கு தனி கணக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தனி கணக்கும் பராமரிக்கப்படும் என இந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி கணக்கிடுவது எளிதாகும் என்பதன் காரணமாக இரு கணக்காக பிரிக்கப்படுகிறது. இந்த விதிமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி ஒரு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் PF பங்களிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் இரண்டு கணக்குகள் பிரிக்கப்படும். 2021-2022 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட பிஎஃப் பங்களிப்புக்கு தனி கணக்கு ஒதுக்கப்படும். அதற்கு எந்த வரியும் விதிக்கப்படாது. மேலும் இன்னொரு கணக்கில் செலுத்தப்படும் PF பங்களிப்புக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.