படப்பிடிப்புக்காக மும்பை சென்ற ராஷ்மிகாவை ஏர்போர்ட்டில் கண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்துள்ளார்கள்.
தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா அறிமுகமாகியுள்ளார். இவர் முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு கிரீக் பார்ட்டீ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுல் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து பல அதிரடி படங்களை கொடுத்த ராஷ்மிகா கடந்தாண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இவருக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ராஷ்மிகா தனது பட வேலை தொடர்பாக விமானத்தின் மூலம் மும்பைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ராஷ்மிகாவை கண்ட ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் அவரை சூழ்ந்துள்ளார்கள். அப்போது ரசிகர் ஒருவர் எப்படி இருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டுள்ளார்.அதற்கு நான் நலமாக உள்ளேன் என்று ராஷ்மிகா அந்த ரசிகரிடம் பதிலளித்துள்ளார். இதனையடுத்து அந்த ரசிகர் அவரிடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட ராஷ்மிகா செம க்யூட்டான ரியாக்சனுடன் ரொம்ப நன்றி என்று தெரிவித்துள்ளார்.