இலங்கை தொடரை வென்ற பிறகு ரோகித் சர்மா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் முழுநேர கேப்டனாக தற்போது ரோகித் சர்மா உள்ளார். இவர் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்த நிலையில் சில தொடர்களிலேயே தனது திறமையை இவர் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது ஆட்டத்தில் தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு இடம் கிடைக்காது என்பதையும், அதற்கு பதிலாக இளம் வீரர்கள் தயாராக உள்ளார்கள் என்பதையும் தொடர்ந்து மறைமுகமாக வெளிக்காட்டி வந்துள்ளார்.
இதற்கு முன்னுதாரணமாக இலங்கை தொடரில் சீனியர் வீரர்களை ஓய்வுக்கு அனுப்பிவிட்டு இளம் வீரர்களை வைத்து ரோகித் சர்மா மிக அருமையாக விளையாடியுள்ளார். இதற்குப் பின்பு பேசிய ரோகித்சர்மா அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது எங்கள் அணியில் பெஞ்சில் அமர்ந்திருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இளம் வீரர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றையும் அவர் கூறியுள்ளார். அதன்படி அவர் அணியின் ஓட்டையை அடைக்க உங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இவர் ஏன் அவ்வாறு கூறியுள்ளார் என்றால் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் துவங்க உள்ள டி20 உலக கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற முடிவில் ரோஹித் உள்ளாராம். இந்த முடிவை மறைமுகமாக வெளிகாட்டும் படியே அணியில் ஓட்டையை சரிசெய்ய இளம் வீரர்கள் தேவைபடுகிறார்கள் என்று அவர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.