Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட!….. பேருந்து பயணிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தற்போது தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியை பிடித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை ஆவின் பால் விலை குறைப்பு, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற அறிவிப்புகளை அரசு செயல்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா புதுச்சேரியில் பொது மக்களுக்கு இலவச பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அதாவது திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மணவெளி தொகுதியை சேர்ந்த திமுக கட்சியினர் நேற்று (பிப்.28) புதுச்சேரியில் இருந்து பாகூர் பகுதிக்கு மக்கள் தனியார் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். மாநில அமைப்பாளரும், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான இரா.சிவா இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தை போலவே பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 500 பேருக்கு முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத், அனிபால் கென்னடி, செந்தில்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Categories

Tech |