குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளபூலாவூரணி பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் காளிராஜிக்கும் அவரது மனைவி ராஜலட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளிராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காளிராஜியின் தாய் வீரலட்சுமி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காளிராஜியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.