“ஆறில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பது பழமொழி அதுபோல் குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில்என்ன சொல்லிக்கொடுகிறோமோ அதைத்தான் அவர்கள் காலம் முழுவதும் பின்பற்றுவார்கள்.
- குழந்தைகளுக்கு இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியமானது.
- பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.
- பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும்.
- எவர்சில்வரில் செய்யப்பட்ட டிஃபன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹோட்பேக் வசதிகொண்டிஃபன் பாக்ஸ்களும் கிடைக்கின்றன.
- பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அவை குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- குழந்தைகளுக்கு காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். மேலும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தவேண்டும்.
- குழந்தைகளுக்கு நொறுக்குதீனிக்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும்.
- காலை உணவுகளில் அதிக அளவு தானியங்களை சேர்த்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
- குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாட அனுமதியுங்கள். இது அவர்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவும், உடல் வளர்ச்சியடைவும் உதவும்.
- குழந்தைகளுக்கு சிலம்பம், நீச்சல், வில்வித்தை, மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளை சொல்லிகொடுங்கள்.
- குழந்தைகளின் வாசிப்பு திறன் அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாசிப்பு திறனை அவர்களுக்கு சொல்லிகொடுங்கள்.
- மேலும் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியம், பண்பாடு மற்றும் முன்னோர்களின் சிறப்புகள் போன்றவற்றை சொல்லிக்கொடுத்து வளர்ப்பது மிகவும் சிறந்தது.