கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 105 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் சிலிண்டர் (19 கிலோ எடையுள்ள) ரூபாய் 2,040-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரூபாய் 105 உயர்ந்து 2,145,50-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று (மார்ச் 1ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு வணிக சிலிண்டர் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரில் (ரூ.915,50) எந்த மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..