Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டி கண்டித்து…. அ.தி.மு.கவினர் போராட்டம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகரில் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குசாவடியில் நடந்த தகராறு காரணமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.கவை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கிய நிலையில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் கவுன்சிலருமான ஆர்.ஜி. மருதுபாண்டியன் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா, முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் ரெத்தினம், சாமிநாதன், மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார்,முன்னாள் எம்.பி. நிறைக்குளத்தான், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் பாதுஷா, பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ஜெயகார்த்திகேயன்.

எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்கள் வாலாந்தரவை ஜெயபால், பாரதி நகர் ராஜேந்திரன், மாரியப்பன், தங்கவேலு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஷ், மகளிரணி செயலாளர் ஜெய்லானி சீனிகட்டி, வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர்கள் கருணாகரன், மோகன்பாபு, ராமமூர்த்தி, வழுதூர் ஜெகன், ஒன்றிய செயலாளர்கள் தர்மர், லோகிதாசன், ஜானகிராமன், அந்தோணிராஜ், கருப்பையா, குப்புசாமி, பரமக்குடி நகர செயலாளர் ஜமால், மொட்டையன் வலசை கோபால், பெருங்குளம் ஊராட்சி  தலைவர் சிவகுமார், நாகாட்சி கல்யாணராமன், ஒன்றிய பாசறை சுந்தர் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று திமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |