UAN எண் இல்லாமலே பி.எஃப் தொகையை எடுப்பதற்கான வசதி ஒன்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேமிப்பவர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு வேளை UAN எண் ஆனது மறந்து போயிருக்கும். இதுபோன்ற சிக்கலான பிரச்சினையை சமாளிப்பதற்காக UAN நம்பர் இல்லாமலேயே, கணக்கில் உள்ள சேமிப்பு பணத்தை பார்க்க முடியும். அதேசமயம் எடுக்கவும் செய்வதற்கான வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் பிஎஃப் அமைப்பின் epfindia.gov.in என்ற வெப்சைட்டில் சென்று ‘Click Here to Know your EPF Balance ‘ என்ற ஆப்சனில் செல்லவும். அடுத்ததாக ‘Member Balance Information’ என்பதை கிளிக் செய்து, உங்களுடைய மாநிலத்தைத் தேர்வு செய்து அதன் உள்ளே சென்று பிஎஃப் விவரங்களை வழங்கினால் பேலன்ஸ் எவ்வளவு என்று தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் பி.எஃப் தொகையை திரும்ப பெறுவதற்கு, அதற்கான விண்ணப்பத்தை பி.எஃப் அலுவலகத்தில் சென்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதன்பின் பிஎஃப் தொகை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வேலையிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் மட்டுமே, முழு பணத்தையும் எடுக்க முடியும் எனவும் வீட்டில் இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தால் முழு பணத்தையும் எடுக்கலாம். ஆனால் ஒரு மாதம் மட்டும் வேலை இல்லாமல் இருந்தால் பி.எஃப் பணத்தில் 75 சதவீத தொகையை மட்டும் எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.