மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பகைவரை வென்றான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவில் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனையடுத்து கும்மியாட்டம், ஒயிலாட்டம், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர் பெண்கள் இரவு முழுவதும் கும்மி கொட்டி குலவையிட்டு கோவிலில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை ஊர் முழுவதும் சுற்றிவந்தனர். இந்த திருவிழாவில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.