பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை “நான் முதல்வன்” முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நான் முதலில் திட்டத்தின் கருப்பொருள் “உலகை வெல்லும் தமிழகம்” என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிய துடிக்கும் இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது என்னும் மனத்தடையை நீக்குவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயலில் திறமையானவர்களாக மாணவர்கள் இளைஞர்களாக மாற்றவே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மொழித்திறனை வளர்க்கும் விதமாக பயிற்சியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.