உக்ரைனின் இராணுவ பலத்தை முழுமையாக அளிப்பதே போரை முடிவுக்குக் கொண்டுவரும் என ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது 5வது நாளாக ரஷ்ய தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதல் நடத்துவதில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் உக்ரைன் நாட்டில் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்க்கு பதிலடி கொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
மேலும் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது உடனே போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “உக்ரைனின் ராணுவ பலத்தை முழுமையாக அழிப்பதும் மற்றும் கிரீமியா பகுதியை மேற்கொள்ள உலக நாடுகள் அங்கீகரிப்பதுமே போருக்கு முடிவு கட்டும்” என பிரான்ஸ் அதிபரிடம் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.