தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. பெரும்பான்மையான கட்சியாக கருதப்படும் அதிமுக தன்னுடைய வெற்றி கோட்டையான கொங்கு மண்டலத்தில் கூட தோல்வியை தழுவியது. இதேபோல் பாஜகவிற்கு சொல்லிக்கொள்ளும்படியான அளவிற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. எனினும் சில இடங்களில் தொகுதிகளை கைப்பற்றிய பாஜக தற்போது மேயர் பதவிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிலர் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அப்போது பேசிய அவர் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத மாவட்ட தலைவர்கள் பதவி விலகிக் கொள்ளும்படி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் எனவும் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் வேட்பாளர்களை நிறுத்த பாஜக நிர்வாகிகள் உடனடியாக பதவி விலகிக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதாவது 30 சதவீதத்திற்கும் கீழாக வேட்பாளர்களை நிறுத்திய மாவட்ட தலைவர்கள் உடனடியாக பதவி விலகிக் கொள்ளும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.