டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி திடீரென சந்தித்து பேசியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் நிலைபாடு என்ன ? என்பது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறியுள்ளார். உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் வழங்கப்பட உள்ளது பற்றியும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.