சென்னை கிண்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதே எண்ணத்தோடு பாஜகவினர் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். தமிழக மக்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களது நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. முதல்வர் வெளியிட்ட வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு நான் முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் பலர் இந்த விழாவில் வந்து கலந்து கொண்டனர். இந்தியா என்பது மாநிலங்களால் உருவானது இல்லை. அது மொழிகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
உண்மையாகவே ராகுல்காந்தி சமரசப் செய்ய வேண்டும் என நினைத்தால் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று அங்குள்ள காங்கிரசாரை சமரசம் செய்ய வேண்டும். அங்குதான் காங்கிரசாரின் வேட்டி சட்டை கிழிந்து சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்குள்ள காங்கிரசாரை முதலில் ராகுல் சமாதானம் செய்துவிட்டு செல்லவும் .தேவையில்லாமல் பாஜகவை சீண்டிப் பார்க்க வேண்டாம்.!!” இவ்வாறு அவர் கூறினார்.