உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையில்நேற்று (பிப்..28) காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து, ரூபாய் 38,504க்கும், கிராமுக்கு ரூபாய் 75 உயர்ந்து ரூபாய் 4,813க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1.10 அதிகரித்து ரூபாய் 70.10க்கும், கிலோ வெள்ளி ரூபாய் 70, 100க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று (மார்ச்1) தங்கம் விலை பற்றி தெரிந்து கொள்வோம். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 48 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,788க்கும், ஒரு சவரன் ரூ.38,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.70க்கு விற்பனையாகிறது.