ரஷ்யாவின் பிரபல மதுபானத்தை கனடா புறக்கணித்து உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கு தயாரிக்கப்படும் மதுபானத்தை அமெரிக்காவில் உள்ள சில மதுபான விடுதிகள் மற்றும் விற்பனைக் கூடங்களை புறக்கணித்துள்ளார். இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘வோட்கா’ என்கிற மதுபானத்தை தான் அமெரிக்கா தற்போது புறக்கணித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள சில மதுபான விடுதிகள் மற்றும் விற்பனை கூடங்களில் உள்ள ‘வோட்கா’ மதுபான பாட்டில்களை அப்புறப்படுத்தி உள்ளனர். அதற்கு மாறாக உக்ரைனில் தயாரிக்கப்படும் மதுபானங்களை விற்பனைக்கு வைத்து அவற்றை பிரபலப்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கனடாவில் உள்ள ஒன்டாரியோ மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட மதுபான கூடங்களில் ரஷ்யாவின் ‘வோட்கா’ மதுபானத்தை புறக்கணித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது