உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுப்பை அடுத்து, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளில் உள்ள விளையாட்டு அணிகள் சர்வதேச அளவிலான நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டுமென விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் ரஷ்யாவின் தேசிய மற்றும் உள்ளூர் கால்பந்து அணிகள் சர்வதேச கால்பந்து தொடரில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப் படுவதாக சர்வதேச கால்பந்து சங்கமும், ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கமும் கூட்டாக அறிவித்துள்ளது.மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதேசமயம் ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் உடனான ஸ்பான்சர்ஷிப்பை ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கம் முடித்துக்கொண்டது.இதைதொடர்ந்து பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் ரஷியாவுடன், போலந்து விளையாடாது என அந்நாட்டு கால்பந்து சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.