Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பல லட்ச ரூபாய் கொடுத்துட்டேன்” மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள விளாம்பட்டி பகுதியில் மாற்றுத்திறனாளியான தவசி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தவசி தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தவசி கூறியதாவது, ஒரு தொண்டு நிறுவனத்தினர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

இதனை நம்பி அந்த தொண்டு நிறுவனத்தினரிடம் பல்வேறு தவணைகளாக 7 1/4 லட்ச ரூபாய் கொடுத்தேன். கடந்த ஒரு ஆண்டாக நலத்திட்ட உதவிகள் வாங்கி தராமல் அவர்கள் ஏமாற்றி வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் தீக்குளிக்கும் முயன்றதாக தவசி தெரிவித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் தவசி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க செய்தனர். இதனையடுத்து காவல்துறையினர் தவசியை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |