Categories
மாநில செய்திகள்

என்ன விட்டுருங்க…. நான் அப்படி பேசல ….. நெல்லை கண்ணன் மனு …!!

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ பிரதமர், அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசிதாகக் கூறி, பல இடங்களில் என் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே “ஜோலியை முடிக்கலியா?” என பேசினேன். அதன் பொருள் வேலை. அதாவது, அரசியலில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொணரவில்லையா? எனும் நோக்கிலேயே அவ்வாறு பேசப்பட்டதே தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல. ஆனால், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, என் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆகவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார்.

நெல்லை கண்ணன் தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Categories

Tech |