கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும் வேலையில்லா திண்டாடத்தைக் கண்டித்தும் சி.ஐ.டி.யு, எ.ஐ.டியு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால், காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
இதில் மக்களவை உறுப்பினர்களான பி.ஆர்.நடராஜன், சுப்புராயன் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.