Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் திருவிழா கொண்டாட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

புகழ்பெற்ற பன்னாரி அம்மன் திருக்கோவிலில் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த 2 வருடங்களாக இந்த கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறாமல் இருந்துள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. வருகிற மார்ச் 7-ஆம் தேதி பூச்சாட்டுதல் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 28-ம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து பன்னாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனை  ரதங்களில் வைத்து ஊர் முழுவது சுற்றிவருவர். அதன்பின் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத்தொடர்ந்து  பக்தர்கள் அதிகாலையில் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் குண்டம் திருவிழா நடைபெறவிருக்கிறது. மேலும் புஷ்பரத விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருவிளக்கு பூஜை போன்றவைகள் நடைபெறவிருக்கிறது. அதன்பிறகு மறு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும்.

Categories

Tech |