சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு நீதிமன்றம் 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு முருகன் தனது ஆட்டோவில் வந்த 13 வயது சிறுமியை பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு அழைத்து செல்லாமல் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம் நடந்தவற்றை தெரிவித்து அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முருகனுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஐந்து வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.