Categories
தேசிய செய்திகள்

”எல்லாம் உங்க ஆதரவோடு நடந்த கொடூரம்” புது குண்டை தூக்கிப் போட்ட சித்தராமைய்யா …!!

டெல்லி ஜே.என்.யு.வில் நடைபெற்ற தாக்குதல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற ஒன்று என சித்தராமைய்யா குற்றஞ்சாட்டினார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்திருந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், “அண்மையில் ஜே.என்.யு.வில் நடத்தப்பட்ட தாக்குதல் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒன்று.

குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு எதிராகவே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது வெட்கக்கேடானது. ஏதோ ஒரு அச்சத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்கவே காவல் துறையனர் இவ்வாறு செய்கின்றனர்” என்று குற்றஞ்சாட்டினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, முகமூடி அணிந்தவர்கள் ஜேஎன்யுவில் நடத்திய தாக்குதலில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 34 பேர் காயமடைந்தனர்

Categories

Tech |