Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தரவரிசை பட்டியலில்…. இந்தியா, நியூசிலாந்து அணிகள் சறுக்கல் ….!!!

நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது.இதில் 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை சமன் செய்தது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

இதில் 100 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி முதலிடத்திலும், 86 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திலும் உள்ளது.இதைதொடர்ந்து  75 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 3-வது  இடத்திலும் , 60 சதவீத வெற்றியுடன்  தென் ஆப்பிரிக்க அணி 4-வது  இடத்திலும் உள்ளது.
இதையடுத்து 49 சதவீத வெற்றியுடன் இந்திய  அணி 5-வது இடத்திலும் , நியூசிலாந்து  அணி 38 சதவீத வெற்றியுடன்  6-வது  இடத்திலும் உள்ளது.இதனிடையே கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரை சென்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த முறை தரவரிசை பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது.

Categories

Tech |