உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் அந்நாட்டிலிருந்து இதுவரை 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் ரஷ்ய அதிபர் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்குமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையில், உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை பாதுகாக்கும் நோக்கில், நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் சுமார் 5 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இப்போரானது தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. இதனையடுத்து உக்ரைனிலிருந்து வெளியேறிய பெரும்பாலான மக்கள் போலந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா போன்ற அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.