புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு தளர்வு நேற்று (பிப்..28) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் செயலாக்க குழு அறிவித்து இருக்கிறது. இதனிடையில் உத்தரவின் முக்கியமான அம்சங்கள் புதுச்சேரி மாநிலத்தில் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனைகள் தொடர்பாக சரியான ஆணவங்களை சுகாதாரத்துறை பராமரிக்க வேண்டும். கொரோனாவில் இருந்து உருமாறிய வைரஸ் தொடர்பாக தகுந்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். ஒமைக்ரான் தொற்று பரவல் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அதன்பின் வயதானவர்கள், இணை நோய் இருபவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் புதுச்சேரியில் பின்தங்கி இருப்பதால், இதனை அதிகரிக்க வேண்டும். இதற்காக ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை முறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தில் அதிகரிக்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் கொரோனா தொற்றை தடுக்கவும், நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்த யூனியன் பிரதேசமாக மாற்றவும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. புதுச்சேரியில் முதல் தவணை தடுப்பூசி 90% , 2-வது தவணை 69 சதவீதத்துக்கு மேல் போட்டுள்ளது. மேலும் விடுபட்டவர்கள் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. எனினும் பலர் முன்வராததால் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சுகாதாரத்துறை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி பிறப்பித்த கட்டாய தடுப்பூசி திட்டம் புதுச்சேரி மாநிலத்தில் உடனே அமலுக்கு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இனிமேல் பொது வெளியில் வருவோர் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதையும் மீறி வெளியே சுற்றித் திரிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. எனவே எந்தெந்த பொதுஇடங்களில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்பது தொடர்பாக அரசு முடிவு செய்து, விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது. விதி மீறினால் தண்டனை வழங்கப்டும். புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு 54(1) விதியின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, கொரோனாவுக்கு உடனே கட்டாய தடுப்பூசியை அரசு அமல்படுத்துகிறது. இதனை மீறுபவர்கள் மீது சட்ட விதிகளின்படி தண்டனை நடவடிக்கைக்கு பொறுப்பாவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.