ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கருவறையில் உள்ள மூலவரை யாரும் படம் எடுக்கக்கூடாது என்று விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மூலவரான சிவலிங்கத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்தப் படத்தை வட மாநில பக்தருக்காக குருக்கள் ஒருவர் செல்போன் மூலம் படம் பிடித்து பெரும் தொகைக்கு விற்றதாக குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் தனித்தனியாக ராமநாதசுவாமி தேவஸ்தானம் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து விசாரித்த ராமநாதசுவாமி கோயிலின் இணை ஆணையர் கல்யாணி, விஜயகுமார் போகில் என்னும் வேத விற்பன்னரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டா