ஐ.நா பொதுச் சபையின் சிறப்பு அவசர 11 வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் 11வது கூட்டம் இன்று இரவு 8.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் முதற்கட்ட கூட்டம் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரெஸ் ரஷ்யாவின் தாக்குதல்களைப் பற்றி கண்டித்துப் பேசினார். அதில் அவர் பேசியதாவது, போதும்- போதும் போர் நடவடிக்கை அதிகமானால் அப்பாவி பொதுமக்கள்தான் பலியாகின்றனர். ராணுவ வீரர்கள் மறுபடியும் தங்கள் இடத்திற்கு திரும்பி செல்ல வேண்டும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசிய தேவையாக அமைந்துள்ளது. சமாதானம் மட்டுமே இந்த பிரச்சினைக்கான தீர்வு ஆகும்.மேலும் ஐ. நா சபை தொடர்ந்து உதவி செய்யும் அவர்களை கைவிடாது. அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் என உக்ரைன் அதிபருக்கு நான் உறுதி அளித்து உள்ளேன் என அவர் பேசினார். இந்நிலையில் அனைத்து தரப்பினரும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். பேச்சுவார்த்தையை தொடங்கலாம் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும், ஐ நா சபையின் ஒட்டுமொத்த கருத்தாக கூட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னால் ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்பதாக ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி லாவ்ரோவ் தெரிவித்திருந்தார். ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை. இருப்பினும் ரஷ்யாவின் சார்பில் சில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஆனாலும் உக்ரைன் சார்பில் அந்நாட்டுப் பிரதிநிதி தொடர்ந்து பங்கேற்று பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.