திமுக தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாள் விழா இன்று(மார்ச்.1) கொண்டாடப்படுகிறது. தனது பிறந்தநாளில் காலையிலேயே மெரினா கடற்கரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து “நான் முதல்வன்” என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது பிறந்தநாளில் என் கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதன்பின் இளைஞர்கள் கல்லூரி பட்டத்தை தாண்டிய தனித்திறமை கொண்டிருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும். இளைஞர்கள் அனைவரும் அனைத்து வகையான தகுதியும், திறமையும் பெற்று அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.