விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் மீண்டும் நேரில் சந்தித்து உள்ளனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மாதம் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இவர்களது பிரிவிற்கு பலரிடமிருந்து பல கருத்துக்கள் வந்து கொண்டிருந்தது. மேலும் இந்தப் பிரிவு இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரது வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றன.
தனுஷ் வாத்தி மற்றும் திருசிற்றம்பலம் போன்ற படங்களில் பிசியாக உள்ளார். ஐஸ்வர்யா அவர் இயக்கும் ஆல்பம் பாடல்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர்கள் இருவரும் விவாகரத்துக்கு பிறகு ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமலும் ,பேசிக் கொள்ளாமல் இருந்தனர். ஆனால் தற்போது வந்த தகவலின் படி இவர்கள் இருவரும் ஒரு பார்ட்டியில் சந்தித்து கொண்டதாக தெரிகிறது.
இருப்பினும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோதும் அவர்கள் பேசிக் கொள்ளவில்லையாம். தனுஷின் நண்பர்கள் ஐஸ்வர்யாவிடமும், ஐஸ்வர்யாவின் நண்பர்கள் தனுஷ் இடமும் பேசிக் கொண்டார்களாம். இவர்கள் இருவரும் பேசிக் கொள்வார்கள் என எதிர்பார்த்தது அவர்களது நண்பர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதை வைத்து பார்க்கும்போது இவர்கள் இருவரும் மீண்டும் சேர்வார்களா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.