Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் போர் தீவிரம்:”… அகதிகளாக வெளியேறிய 5 லட்சம் மக்கள்… ஐநா அகதிகள் ஆணையம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் போர் காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறியதாக ஐநா அகதிகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து ஆறாவது நாள் ஆகிறது. இராணுவத்தளங்கள்  மட்டுமல்லாமல், குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. போர் பதற்றத்தால், உக்ரைன் நாட்டை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட ஐந்து லட்சம் மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிவிட்டதாக ஐநா அகதிகள் ஆணையம் கூறியுள்ளது.

ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள தொடங்கிய பின், ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்கள் நாட்டிற்குள்ளேயே வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தீவிரமடைந்தால் அகதிகளாக குடிபெயரும் மக்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்கள், ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் மால்டோவா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் வசிக்கிறார்கள். இதில் போலந்து நாட்டின் எல்லைப் பகுதியில் 2 லட்சத்து 81 ஆயிரம் மக்கள் குவிந்திருக்கிறார்கள். அப்பகுதியில், நீளமான வரிசையில் வாகனங்களும், பேருந்துகளும் காத்திருக்கின்றன. பல மக்கள் நடை பயணமாகவே எல்லைப்பகுதிகளை கடந்து செல்கிறார்கள்.

Categories

Tech |