தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் 13 வயதான சிறுமி ஒருவர் அவரது தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிச்சம்பாளையம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் ஒருவன் அவனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் சிறுமி சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றுள்ளான்.
மேலும் அந்த சிறுவன் சிறுமியை ஆங்காங்கே தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி மற்றும் அவரது தாய் சத்தம் போடவே அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று சிறுவனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதன்பின் சிறுவனை திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.