Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்னும் கல்யாணமே ஆகல” ….ஷாருக்கான் முதல் சன்னி லியோன் வரை… இப்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்…!!!

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. நடிகை நயன்தாராவுக்கும் , விக்னேஷ் சிவனுக்கும் நிச்சியதார்தம் நடைபெற்றுள்ள  நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது நயன்தாரா கைவசம் நிறைய படம் வைத்துள்ளாராம். அந்த படங்கள் எல்லாம் முடிவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும்.

அதன் பிறகுதான் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 37 வயதான நயன்தாரா எப்போது திருமணம் செய்வார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.  சாருக்கான் முதல் சன்னிலியோன் வரை பலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

  1. இந்நிலையில் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இருவரும் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகை நயன்தாராபோயஸ் கார்டனில் வீடு வாங்கி  இருப்பதாகவும் அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்த உடன்  இருவரும் திருமணம் செய்துகொள்ளவர்கள்  எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |