தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வரும் 7-ஆம் தேதி அன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறை அளிக்கபட்ட தினத்திற்கு பதிலாக 19.03.2022 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.