இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிர்வாகம் இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 12-ஆம் தேதி ஜி.கே உலக பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் அதிகமான முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான தகுதியான நபர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்ய உள்ளன.
இம்முகாமில் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் எஸ்.எஸ்.எல்.சி பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு உள்ளிட்ட கல்வி தகுதிகளை உடைய வேலையை நாடுபவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைகளை தேர்வு செய்து பயன் பெற்றுக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அனைத்து கல்வி சான்றிதழ் மற்றும் தற்குறிப்புகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.