கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு பகுதியில் கூலி தொழிலாளியான ஜெஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெஸ்டின் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற ஜெஸ்டின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது ஜெஸ்டின் அதே பகுதியில் இருக்கும் ஒரு கல்லறை தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜெஸ்டினை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெஸ்டின் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.