அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அவுரி திடலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட அவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் நகர செயலாளர் ஆகியோர் பேசியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க.வின் பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.