Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மாணவி  தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதச்சிக்கோட்டை பகுதியில் ஹென்றிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவின் பெற்றோர் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அகிலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து சுப நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த அகிலாவின் பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அகிலா கதவை திறக்காமல் இருந்துள்ளார்.

இதனால் அகிலாவின் பெற்றோர் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது அகிலா தன்னுடைய அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |